இலங்கையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களின் ஆதாரங்களை அம்பலப்படுத்தியது சர்வதேச ஊடகம்!

6
167

இலங்கையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களின் ஆதாரங்களை அம்பலப்படுத்தியது சர்வதேச ஊடகம்!

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாமாக ஒரு விசாரணை குழுவை நியமித்தது.

ஆனால் அப்போதைய ராஜபக்சே அரசு இதனை ஏற்க மறுத்து விசாரணை குழுவை இலங்கையில் அனுமதிக்கவில்லை. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் புதிய அதிபர் சிறிசேனா அரசும் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டுகிறது. இலங்கையில் போர் முடிந்த பின்னரும் தமிழர்கள் பெரும் சித்தரவதைக்கு உள்ளாகுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வருகிறது. தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்பிக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் அவர்களை கடத்தி பாதுகாப்பு படை சித்தரவதை செய்கிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது.

இப்போது இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் அசோசியேட் பிரஸ் விசாரணை செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இலங்கை பாதுகாப்பு படையினரால் சித்தரவதைக்கு உள்ளாகிய இலங்கை தமிழர்களிடம் சாட்சிகளாக பேட்டி கண்டு, விவரித்தும் அதனை வெளியிட்டு உள்ளது.

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்களை தி அசோசியேட் பிரஸ் எண்ணிட்டு வெளிப்படுத்தி வருகிறது.

இலங்கை அரசின் கீழ் 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாகி உள்ளனர் என இப்போது செய்தி வீடியோவை வெளியிட்டு உள்ளது. 205 சாட்சியாக தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்கும் காட்சியுடன் அசோசியேட் பிரஸ் செய்தி வீடியோ தொடங்குகிறது. இலங்கையில் போர் முடிந்த போது பாதிக்கப்பட்ட இளைஞர் சிறார். இளைஞர் பாதுகாப்பு படையினரால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளானதை விளக்குகிறார். கொடூரமான முறையில் இளைஞர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.

இலங்கையில் இப்போது இருக்கும் அரசின் கீழ் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை செய்தி விளக்குகிறது.

சித்தரவதைக்கு ஆளான இளைஞர்கள் தங்களுக்கு நேரிட்டதை மிகவும் அச்சத்துடன் செய்தி நிறுவனத்திடம் கூறிஉள்ளனர். இளைஞர்களின் மார்புகள், முதுகு, கை மற்றும் கால்களில் சிகரெட்களை கொண்டும், பழுத்த இரும்பு கம்பிகளை கொண்டும் சூடு வைக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் தங்கள் உடல் முழுவதும் இலங்கை ராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட காயங்களை காட்டி உள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். அசோசியேட் பிரஸ் 30 மருத்துவ மற்றும் உளவியல் அறிக்கையை ஆய்வு செய்து, 20 இளைஞர்களுடன் நேரடி உரையாடலையும் நடத்தி உள்ளது.

விடுதலை புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிருட்ட முயற்சி செய்தோம் என்ற குற்றச்சாட்டுகளில் எங்களை கடத்தி சென்றார்கள், 2016 தொடக்கத்தில் இருந்து இவ்வருட ஜூலை வரையில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டோம் என இளைஞர்கள் கூறிஉள்ளனர்.

பாலியல் ரீதியாக இலங்கை பாதுகாப்பு படையினரால் எவ்வாறு சித்தரவதை செய்யப்பட்டோம் என்பதை சொல்ல முடியாமல் அவர்கள் கண் கலங்கிய வண்ணம் பேசும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று உள்ளது. அவர்களின் பாதுகாப்பு காரணமாக அசோசியேட் பிரஸ் புகைப்படம் மற்றும் பிற தகவல்களை வெளியிடவில்லை.

இலங்கை அதிகாரிகள் மறுப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சித்தரவதை தொடர்பாக வழக்கம் போல் அந்நாட்டு பாதுகாப்பு படை மறுப்பையும் தெரிவித்து உள்ளது.

இலங்கை ராணுவத்தின் லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், “இந்நடவடிக்கையில் ராணுவம் ஈடுபடவில்லை, போலீசும் ஈடுபட்டு இருக்காது என்பதை உறுதியாக சொல்கிறேன்,” என பேசிஉள்ளார். அதனை இப்போது செய்வதற்கு எங்களுக்கு எந்தஒரு காரணமும் கிடையாது என அவர் கூறிஉள்ளார். இலங்கை மந்திரி போலீஸ் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேட்டியளிக்க தயாரென ஒப்புக்கொண்டு உள்ளார், ஆனால் அதனை செய்யவில்லை.

இலங்கையில் இப்போது இருக்கும் சிறிசேனா அரசு 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் காட்சி மாறும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து எதிர்பார்ப்பாகவே தொடர்கிறது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் மீறல் விசாரணை அதிகாரி பியர்ஸ் பிகோ பேசுகையில், இதுபோன்ற கொடூரத்தை என்னுடைய 40 வருட அனுபவத்தில் பார்த்ததே கிடையாது என விவரித்து உள்ளார்.

“இலங்கையில் அதிகாரிகள் ஈடுபட்ட பாலியல் தொல்லைகள் மிகவும் அதிர்ச்சிகரமானது, நான் இதுவரை பார்த்திராத மிக மோசமான கொடுமையாகும்,” என கூறிஉள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: