இலங்கையில் ஜனவரி முதல் புதிய தடை வருகிறது!

0
60

இலங்கையில் ஜனவரி முதல் புதிய தடை வருகிறது!

பொலிதீன் மற்றும் லன்ச் சீர் என்பவற்றுக்கு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை அமுல்படுத்த இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அச்சங்கத்திடம் இத்தடை குறித்து வினவியபோதே இவ்வாறு கூறியுள்ளது.

அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய வகை பொலிதீன் பைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய நான்கு, ஐந்து மடங்கு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது. இந்த நிதிச் சுமையை சகல உற்பத்தியாளர்களுக்கும் சுமப்பதில் பிரச்சினைகள் உள்ளன.

இதனால், உற்பத்தி குறைந்து, கேள்வி அதிகரிக்கும் போது சந்தையில் இப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் கொஞ்சம் படியுங்களேன்!

கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகர் தாடி பாலாஜி!

நடிகர் தாடி பாலாஜி
நடிகர் தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி தற்போது முக்கிய சானலில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடாகி பிரச்சனையானது.

சின்னத்திரையுலகில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட குழந்தைகள் பங்கேற்கும் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் கடந்த வாரம் எபிசோடில் கலந்துகொண்டார்.

இதில் குழந்தைகளின் திறமையை பாராட்டி பேசியவர் இவர்களை பார்க்கும் போது என் மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன் என கண்ணீர்விட்டு அழுதார். இது பலருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: