இலங்கையின் புதிய சட்டமூலம்: தமிழக தலைவர்கள் கொதிப்பு!

0
55

கச்சதீவு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டமூலம் மனித உரிமை மீறலான செயற்பாடாகும் என தமிழக மீன்பிடி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் எல்லைமீறி வந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்வதுடன், 50 லட்சம் ரூபா முதல் 7.24 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டமூலம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

காற்றின் வேகம் வேகம் காரணமாக படகுகள் எல்லைத் தாண்டி செல்வதற்கு மீனவர்கள் என்ன செய்வார்கள்.

மேலும் அபராதத்தினை அதிகரிக்கும் புதிய சட்டமூலம் மனித உரிமை மீறலாக அமைவதுடன் இந்திய மீனவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. அத்துடன் குறித்த சட்டத்தினை மீளப் பெறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியறுத்த வேண்டும் என, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நட்பு நாடு எனக் கூறிக் கொண்டு கும்பிட்டுக் கொண்டே முதுகில் கோடரியைப் பாய்ச்சுவதைப் போல தமிழக மீனவர்களைக் குறி வைத்து மனித நேயமற்ற ஒரு சட்டமூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: