இப்படியும் ஆடு திருடுவாங்களா!! என்ன ஒரு திருட்டு கொடுமை!!

0
137

இப்படியும் ஆடு திருடுவாங்களா.. என்ன ஒரு திருட்டு…கொடுமை

வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றை வைத்திருக்கும் ஒருவரிடம் ஹயஸ் ரக வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், தான் படம் எடுப்பதற்காக சூட்டிங் ஒன்று எடுக்கவுள்ளதாகவும் அதற்கு 15 ஆடுகள் தேவை எனவும் கூறியுள்ளார்.

இதற்கு ஆட்டு உரிமையாளரும் சம்மதித்த நிலையில், பிறிதொரு இடத்தில் சூட்டிங் நடப்பதால் ஆடுகளைக் கொண்டு செல்ல வேண்டும் என 15 ஆடுகளை ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்றியுள்ளார்.
அத்துடன், ஆடுகளை வழங்கியமைக்காக ஆட்டு உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வாடகையாகக் கொடுத்துள்ளார்.

ஆடுகளை ஏற்றிக்கொண்டு ஆட்டு உரிமையாளரையும் அழைத்துக் கொண்டு, வவுனியா நகரை நோக்கிச் சென்ற குறித்த நபர் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ உணவுச்சாலை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சோடா ஒன்று வாங்கித் வருமாறு 200 ரூபாய் பணத்தை கொடுத்து, ஆட்டு உரிமையாளரை வாகனத்தில் இருந்து இறக்கியுள்ளார்.
சோடா வாங்கிக் கொண்டு வாகனம் நின்ற இடத்திற்கு ஆட்டு உரிமையாளர் வந்தபோது வாகனம் குறித்த இடத்தில் காணப்படவில்லை. ஆடுகளும் இல்லை.
திட்டமிடப்பட்டு ஆடுகள் திருடப்பட்டதை உணர்ந்த ஆட்டு உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: