இப்படியுமா? நித்தியானந்தாவின் பெண் சீடர்களின் அட்டகாசம்! அதிரடியான பதிலடி?

0
199

இப்படியுமா? நித்தியானந்தாவின் பெண் சீடர்களின் அட்டகாசம்! அதிரடியான பதிலடி?

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்துக்கு இன்று வரை எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவரும், போதும் போதும் எனும் அளவிற்கு விளக்கம் கொடுத்த பிறகும், எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை.

இந்து அமைப்புகள் ஒருபக்கம் வைரமுத்துவை எதிர்க்க, சமீபத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பேசுவதாக இளம் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், மிக ஆபாசமாக அந்த இளம் பெண் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல், வேறு சில சிறுமிகளும் வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சித்தனர்.

இந்த நிலையில் இந்த சிஷ்யையை விடாமல் துரத்தும் நெட்டிசன்கள் மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை,எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் ஆண்டாளை தான் சிறுமைப்படுத்துவேனா? என்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா? செய்யாத தப்புக்காக, இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன்” என்று வைரமுத்து சமீபத்தில் உருக்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டாள் பற்றி வைரமுத்து வெளிப்படுத்திய கருத்துக்காக, அவருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும்கூட, அவர்கள் தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவது, அரசியல் லாபத்திற்காகத்தான். விவாதங்களும், மாற்றுக் கருத்துகளும்தான் ஒரு சமூகத்தை அறிவுத் தளத்தின்முன் நகர்த்தும்.

இந்தியாவில் விவாதப் பண்பாடு என்பது காலம்தொட்டு இருந்துவருவதாகும். விமர்சனமே யாரும் செய்யக்கூடாது. எந்த நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்று கூறுவது, அடக்குமுறையாகும்.

கருத்து வெளியிடும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதே போன்று அவர் கூறியிருக்கும் கருத்தின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக காணப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: