இன்றைய ராசிபலன் செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017.

0
337

இன்றைய நாள் எப்படி – தேதி: செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017

ஹேவிளம்பி வருடம்
செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017
ஆவணி
20
யஜூர் உபாகர்மம், அனந்தவிரதம்
நல்ல நேரம்
காலை: 8:00AM – 9:00AM
பகல்: 2:00PM – 3:00PM
இராகுகாலம்
பகல்: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 10:30PM
எமகண்டம்
காலை: 9:00AM – 10:30AM
இரவு: 1:30AM – 3:00AM

மேஷம்:-தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும்.
ரிஷபம்:-புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்:-புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதுத்தெம்பு பிறக்கும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும். கருத்தரிப்பு அல்லது பிள்ளைப் பிறப்பு ஏற்படலாம்.

கன்னி:-தனவரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் சிறக்கும்.
மகரம்:-இன்று உங்களுக்கு சுமாரான நாள். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள்.
கடகம்:-எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவில் விரிசல் ஏற்படலாம்.. உயர் அதிகாரிகளின் சொல்படிப் பணிவாக நடந்தால் ஆதாயம் பெறலாம்.
சிம்மம்:-பணவரவால் மனம் பரவசப்படும் நாள். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.

துலாம்:-வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
மீனம்:-தொழில் புரிவோர்க்கு வீண்செலவுகளும், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.
தனுசு:-மனதில் தைரியமும், புதிய உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்.
விருச்சிகம்:-தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். துணிந்து செயல்பட்டு தோல்வியைத் தவிருங்கள். முயற்சி திருவினை யாக்கும். முயலுங்கள் முடியாததில்லை.
கும்பம்:-தனவரவு தாராளமாக இருக்கும் நாள். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் அனைத்ததும் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்கு வன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: