இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2017

0
157

இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2017

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2017
புரட்டாசி 14
மகாநவமி, சரசுவதி பூஜை, ஆயுதபூஜை
நல்ல நேரம்
காலை: 6:30AM – 7:30AM
மாலை: 5:00PM – 6:00PM
இராகுகாலம்
காலை: 10:30AM – 12:00AM
இரவு: 1:30PM – 3:00PM
எமகண்டம்
பகல்: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 10:30PM

மேஷம்
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். இறைவன் திருவருளால் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வீட்டில் திருமணப் பேச்சுக்கள் எழலாம். எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

ரிஷபம்
நியாயமாக நடக்கவேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் அனுகூலமான மற்றும் சாதகமான சூழல் உருவாகும்.
மிதுனம்
புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். எதிர்பார்த்த தனவரவரவால் ஏற்றம் வரும். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கனவுகள் இனிமை தரும்.
கன்னி
பெரிய மனிதர்களிடம் ஒத்துப் போகாத நிலை ஏற்படும். கல்வியில் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை. சுகமும் குறையும்.
மகரம்
சமாளிக்க முடியாத செலவுகளால் கடன் பெற நேரும். நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
கடகம்
இனிய பேச்சால் பெண்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும். அரசுப்பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
சிம்மம்
ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். வேலைகளில் திறமைக் குறைவால் ஏளனம் செய்வர். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
துலாம்
கூட்டாளிகளின் உதவியால் வியாபாரம் பெருகும். மனைவி இனிய மாற்றங்களை விரும்புவார். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
மீனம்
பொதுவாழ்க்கை ஈடுபாடு, வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும். எல்லா விதத்திலும் பூர்ண சுகம் கிடைக்கும். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
தனுசு
எதிர்பாராத பயணங்களால் இன்பம் பெருகும். அன்பு நண்பர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
விருச்சிகம்
உங்கள் நீண்ட நாளைய உழைப்பின் பயனை இப்போது அனுபவிப்பீர்கள். உணர்வு பூர்வமான விஷயங்களை வீட்டில் விவாதிக்காதிருப்பது நல்லது. தனவருமானம் குறையும்.
கும்பம்
உங்கள் பொருட்களின் தரத்தை உயர்த்தி விற்பனை செய்தால் இலாபம் அதிகரிக்கும். திட்டங்களைத் திறம்படத் தீட்டினால் தொழில் வளம் பெருகும். பயணம் பயன் அளிக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: