இன்றைய ராசிபலன் 28-01-2018

0
165

இன்றைய ராசிபலன் 28-01-2018

28.1.2018 ஞாயிற்றுக்கிழமை ஹேவிளம்பி வருடம் தை மாதம் 15-ம் நாள்
வளர்பிறை. துவாதசி திதி மறுநாள் பின்னிரவு மணி 2.09 வரை பிறகு திரயோதசி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு மணி 10.57 வரை பிறகு திருவாதிரை நட்சத்திரம். யோகம்: சித்தயோகம்.
குளிகை: 3:00 – 4:30
சூலம்: மேற்கு
பொது: காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் ரதோற்சவம். குன்றக்குடி ஸ்ரீமுருகப் பெருமான் பவனி.
பரிகாரம்: வெல்லம்

நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30
இராகு காலம் மாலை மணி 4.30-6.00

மேஷம் : காரியம்
ரிஷபம் : சந்திப்பு
மிதுனம் : கவனம்
கடகம் : அலைக்கழிப்பு
சிம்மம் : அனுபவம்
கன்னி : புகழ்
துலாம் : பாசம்
விருச்சிகம் : கவலை
தனுசு : திறமை
மகரம் : துணிச்சல்
கும்பம் : மதிப்பு
மீனம் : ஆதரவு

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அசதி, சோர்வு வந்து போகும். பிற்பகல் முதல் இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மிதுனம்: காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வலைச்சுமை மிகுந்த நாள்.

கடகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.

துலாம்: காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் கவனமுடன் செயல்பட பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலை ச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

தனுசு: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப் படுத் துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறி வீர்கள். தாயா ருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபா ரத்தில் கணிசமாக லாபம் உயரும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: