இன்றைய ராசிபலன் 25-01-2018

0
154

இன்றைய ராசிபலன் 25-01-2018

25.1.2018 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் தை மாதம் 12-ம் நாள்.
வளர்பிறை அஷ்டமி திதி காலை மணி 10.15 வரை, பிறகு நவமி. பரணி நட்சத்திரம் மறுநாள் அதிகாலை மணி 3.03 வரை, பிறகு கார்த்திகை. யோகம்: மறுநாள் அதிகாலை மணி 3.03 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: மதுரை மீனாட்சி சுந்தரேசுவராள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருச்சேறை சாரநாதர் பரமபதநாதர் சேஷ வாகனத்தில் வீதி உலா. திருநெல்வேலி நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9
எமகண்டம் காலை மணி 6.00-7.30
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00

மேஷம் : சங்கடம்
ரிஷபம் : முயற்சி
மிதுனம் : பாராட்டு
கடகம் : வெற்றி
சிம்மம் : மகிழ்ச்சி
கன்னி : நெருக்கடி
துலாம் : மனஉறுதி
விருச்சிகம் : பணவரவு
தனுசு : அந்தஸ்து
மகரம் : ஆசி
கும்பம் : வாய்ப்பு
மீனம் : முடிவு

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. போராட்டமான நாள்.

துலாம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நெருங்கிய சிலருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவு கூடும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: