இன்றைய ராசிபலன் 20-01-2018

0
161

இன்றைய ராசிபலன் 20-01-2018

20.1.2018 சனிக்கிழமை ஹேவிளம்பி வருடம் தை மாதம் 7-ம் நாள்.
வளர்பிறை திரிதியை திதி மதியம் மணி 12.20 வரை, பிறகு சதுர்த்தி திதி. சதயம் நட்சத்திரம் மறுநாள் அதிகாலை மணி 3.45 வரை, பிறகு பூரட்டாதி. யோகம்: மறுநாள் அதிகாலை மணி 3.45 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: திருநள்ளார் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம். விஷ்ணு ஆலய வழிபாடு நன்று.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00
இராகு காலம் காலை மணி 9.00-10.30

மேஷம் : நன்மை
ரிஷபம் : செயல்
மிதுனம் : புத்துணர்ச்சி
கடகம் : அவமானம்
சிம்மம் : அறிமுகம்
கன்னி : பிரார்த்தனை
துலாம் : சந்தோஷம்
விருச்சிகம் : நட்பு
தனுசு : தன்னம்பிக்கை
மகரம் : சுறுசுறுப்பு
கும்பம் : கவலை
மீனம் : ஆதாயம்

மேஷம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபா ரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உங்களால் மற்ற வர்கள் ஆதாயமடைவார்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்க ளுக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் மரி யாதை கூடும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.

தனுசு: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமா கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத் தாருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மீனம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து
கொள்ளுங்கள். திடீர் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: