இன்றைய ராசிபலன் 19-01-2018 Daily Jothidam

0
136

இன்றைய ராசிபலன் 19-01-2018 Daily Jothidam

19.1.2018 வெள்ளிக்கிழமை ஹேவிளம்பி வருடம் தை மாதம் 6-ம் நாள்.
வளர்பிறை துவிதியை திதி காலை மணி 11.20 வரை, பிறகு திரிதியை திதி. அவிட்ட நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு மணி 2.23 வரை, பிறகு சதயம். யோகம்: சித்தயோகம்.
குளிகை: 7:30 – 9:00
சூலம்: மேற்கு.
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10
எமகண்டம் மாலை மணி 3.00-4.30
இராகு காலம் காலை மணி 10.30-12.00

மேஷம் : பதவி
ரிஷபம் : திட்டங்கள்
மிதுனம் : நிம்மதி
கடகம் : விமர்சனம்
சிம்மம் : வெற்றி
கன்னி : தரிசனம்
துலாம் : அனுபவம்
விருச்சிகம் : மதிப்பு
தனுசு : மகிழ்ச்சி
மகரம் : டென்ஷன்
கும்பம் : பகை
மீனம் : முகப்பொலிவு

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியா
பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: மதியம் 1.27 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்

கடகம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 1.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மகரம்: மதியம் 1.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். கணவன் -மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 1.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்: பெரியோரின் ஆசி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: