இன்றைய ராசிபலன் 15-09-2017

0
422

இன்றைய ராசிபலன் 15-09-2017 வெள்ளிக்கிழமை

மேஷம்
தனவரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்குத் தொழில் விருத்தி ஏற்படும். பெயரும், புகழும் அதிகரிக்கும்.

ரிஷபம்
இன்று, சுமாரான பணவரவு உள்ள நாள். மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தாமதங்கள் ஏற்படும்.

மிதுனம்
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

கன்னி
புதிய சொத்துக்கள் சேரலாம். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர பரிசுத் திட்டங்களை அறிவிப்பர்.

மகரம்
பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். மனதுக்குப் பிடித்த நவீன புத்தாடைகள் வாங்குவீர்கள்.

கடகம்
குடும்பத்தாரின் அற்ப ஆசைகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படும். பணியாளர்கள் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பர். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் பூஜ்யமாகும்.

சிம்மம்
அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயம் பெறுவீர்கள். விளம்பரங்கள் மூலமாக உங்கள் நிறுவனம் புகழ் பெறும். பதவி உயர்வுகள் எதிர்பார்க்கலாம்.

துலாம்
தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்.

மீனம்
உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை. நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. வாகன சுகம் குறையும்.

தனுசு
குடும்ப உறுப்பினர்களின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். சமூக விழிப்புணர்வோடு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்
கோபத்தாலும், மனைவியின் கலகத்தாலும், உறவுகளுக்குள் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும். வாகன சுகம் உண்டு.

கும்பம்
நீண்ட தூரப் பயணங்களில் தடைகள் ஏற்படலாம். வாகனங்களை விதிகளின்படி செலுத்தாவிட்டால் விபத்துக்கு வழிவகுக்கும். குழந்தைகளுக்குச் சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017
ஆவணி
30
முகூர்த்த நாள்
நல்ல நேரம்
காலை: 6:00AM – 7:00AM
மாலை: 5:00PM – 6:00PM
இராகுகாலம்
காலை: 10:30AM – 12:00AM
இரவு: 1:30AM – 3:00AM
எமகண்டம்
பகல்: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 1:30PM

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: