இன்றைய ராசிபலன் 14-09-2017

0
283

இன்றைய ராசிபலன் 14-09-2017
தேதி: வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017

மேஷம்
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். தனவரவால் புதிய உற்சாகமும், மனத்திருப்தியும் ஏற்படும்.. புதிய பதவிகள் கிடைக்கப் பெற்று, அதன் காரணமாக வாகன வசதிகளும் பெருகும்.

ரிஷபம்
மனநிம்மதி கெடும். மனைவி, மக்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு, அதிக செலவு காரணமாகப் பணமுடை ஏற்படலாம். சிலர் அவமானங்களை எதிர்கொள்ள நேரலாம்.

மிதுனம்
பொருளாதார நிலை உயரும். முக்கிய நபர்களின் சந்திப்பால் அரசாங்க உதவிகள் சுலபமாகக் கிடைக்கும் புதிய வாகன வசதியால் சந்தோஷம் அடைவீர்கள்.. கவனமாகப் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம்.

கன்னி
அரசு உதவிகள், விஐபி க்களின் ஆதரவு, புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மகரம்
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியக் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.

கடகம்
இன்று சுமாரான நாள். வீண்வம்புக்குச் செல்லாதிருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும்.

சிம்மம்
தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூடத் துள்ளி எழும்.

துலாம்
பக்தி மயமான நாள். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மீனம்
வீட்டில் பொருள்கள் காணாமற் போகாவண்ணம் பாதுகாப்புடன் இருத்தல் அவசியம். வாகனத்தில் பழுது ஏற்பட வாகன சுகம் குறையும். காரியத்தடையும், தூக்கமின்மையும் தொல்லை தரும்.

தனுசு
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்திக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.

விருச்சிகம்
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்

கும்பம்
இன்று வெற்றி என்பது எட்டாக் கனியாகும். எதிலும் ஜெயிக்க முடியாது. உயர் அதிகாரிகளின் கண்கணிப்பால், ஓய்வின்றிப் பணிபுரிய நேரும். மனதில் திருப்தி இன்மையே மிஞ்சும்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017
ஆவணி
29
நல்ல நேரம்
காலை: 10:30AM – 11:30AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 1:30PM – 3:00AM
இரவு: 10:30PM – 12:00PM
எமகண்டம்
காலை: 6:00AM – 7:30AM
இரவு: 10:30PM – 12:00PM

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: