இன்றைய ராசிபலன் 13-09-2017

0
417

இன்றைய ராசிபலன் 13-09-2017

மேஷம்
இன்று தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். சிலருக்கு ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். மாற்றத்தால் பல முன்னேறங்கள் நிகழலாம்.

ரிஷபம்
உற்சாகம் மிக்க உன்னத நாள். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன் பிறப்புக்களால் உதவி உண்டு. எடுத்த காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும்.

மிதுனம்
பிறரிடம் வம்புக்குச் செல்லாதிருப்பதே நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும்.

கன்னி
நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட புனிதப் பயணங்கள் மற்றும் தெய்வீக காரியங்கள் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோஷங்கள் கூடும், மனைவியின் உதவியைப் பெற்று மகிழ்வீர்கள்.

மகரம்
எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும் அரசு அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது. மனக்கவலையும் சோகமுமே மிஞ்சும். பணவிரயம், அந்தஸ்துக் குறைதல் ஆகியவை ஏற்படும்.

கடகம்
எதிர்பாராத தனவரவு உண்டு. சிறப்பான நவீன ஆடைகளை அணிந்து அனைவரையும் கவர்வீர்கள். மாணவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர்பால் நேசம் ஏற்படும்.

சிம்மம்
பல வழிகளிலும் தனலாபம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.

துலாம்
கோபத்தை அடக்கி அனைவரிடமும் பணிவுடன் நடப்பது நல்லது. மௌனமே கோபத்திற்கு மருந்து. எனவே, எதற்கும் வாய் திறக்காது இருப்பது நல்லது. சந்திராஷ்டம நாள் ஆதலால் எச்சரிக்கையுடன் இருங்கள்.

மீனம்
இனிய சுற்றுலா, வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் கிடைக்கும்.

தனுசு
எல்லா நலமும், வளமும் பெறும் இனிய நாள். தனவரவு கூடும். பயணங்களால் மனம் மகிழும். பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும்.

விருச்சிகம்
அரசுப் பணிக்கு மனுச் செய்தவர்கள், அனுகூலமான பதில்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.

கும்பம்
இன்று சுமாரான நாள். கல்வியில் தேர்ச்சி பெறக் கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கௌரவக் குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017
ஆவணி
28
வைகானச ஸ்ரீஜெயந்தி, பாஞ்சராத்திர ஸ்ரீஜெயந்தி
நல்ல நேரம்
காலை: 9:00AM – 10:00AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 12:00PM – 1:30PM
இரவு: 12:00AM – 1:30AM
எமகண்டம்
காலை: 7:30AM – 9:00AM
இரவு: 12:00AM – 1:30AM

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: