இன்றைய ராசிபலன் 08-02-2018

0
187

இன்றைய ராசிபலன் 08-02-2018

8.2.2018 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் தை மாதம் 26-ம் நாள்.
தேய்பிறை அஷ்டமி திதி பிற்பகல் மணி 02.05 வரை பிறகு நவமி. விசாக நட்சத்திரம் மாலை மணி 05.51 வரை பிறகு அனுஷம். யோகம்: சித்தயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9
எமகண்டம் காலை மணி 06.00-07.30
இராகு காலம் மதியம் மணி 01.30-03.00

மேஷம் : நிகழ்வு
ரிஷபம் : உதவி
மிதுனம் : நன்மை
கடகம் : ஆதரவு
சிம்மம் : சுபச்செய்தி
கன்னி : நன்மை
துலாம் : மனஉளைச்சல்
விருச்சிகம் : வேலை
தனுசு : அந்தஸ்து
மகரம் : சேர்க்கை
கும்பம் : பேச்சு
மீனம் : சகிப்பு

மேஷம்: காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்: காலை 11.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: காலை 11.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. யாரை
யும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

தனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வியாபாரத்தில் போட்டி
களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்: காலை 11.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: