இன்றைய ராசிபலன் தேதி: வெள்ளிக்கிழமை, 1 செப்டம்பர் 2017.

0
446

இன்றைய ராசிபலன் தேதி: வெள்ளிக்கிழமை, 1 செப்டம்பர் 2017

மேஷம்

பெண்களால் லாபம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

ரிஷபம்
தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பெண்களால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். வழக்குகளைத்தள்ளிப் போடுவது நல்லது.

மிதுனம்
தொழில் விரிவாக்கத்துக்கு அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலமும் ஏற்படும். சாஸ்திர பயிற்சியில் தெளிவு ஏற்படும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும்.

 

கன்னி
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேண்டாத விவகாரங்களால் மனக்கவலை ஏற்படலாம். மனைவியால் குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறையலாம்.

மகரம்
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தாரிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கவனமாகப் படித்தால் கல்வியில் சிறப்புண்டு.

கடகம்
எதிர்பார்த்த இடங்களில், இருந்து எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பால்ய நண்பரைச் சந்திந்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.

 

சிம்மம்
திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். பெண்களால் பண விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.

துலாம்
வாகன சுகங்கள் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு உயர்வீர்கள். காதலில் விழ நேரலாம். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.

மீனம்
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த அக்கறை எடுக்க நேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.

 

தனுசு
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு.

விருச்சிகம்
நண்பர்களே மோசம் செய்வர் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. காரியத் தடைகளால் ஆர்வம் குறையும்.

கும்பம்
உங்கள் இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரிகளுக்குப் பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: