இன்றைய ராசிபலன் தேதி: வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017

0
558

இன்றைய ராசிபலன் தேதி: வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017

மேஷம் aries-mesham
தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு பெண்ணால் குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம் taurus-rishibum
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேண்டாத விவகாரங்களால் மனக்கவலை ஏற்படலாம். மனைவியால் குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறையலாம்.
மிதுனம் gemini-mithunum
வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்னையா பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
கன்னி virgo-kanni
வாகன சுகம் குறையும். தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கவேண்டிய நாள். நன்கு பழகிய நண்பர்களே மோசம் செய்வர் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும்.

மகரம் capricorn-magaram
பெண்களால் பண விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
கடகம் cancer-kadagam
இளமைக் கால இனிய நண்பரைச் சந்திந்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில், இருந்து எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.
சிம்மம் leo-simmam
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த அக்கறை எடுக்க நேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
துலாம் libra-thulam

புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். பணவரவு உண்டு. தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத் தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.
மீனம் pisces-meenam
தனலாபம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் புதிய உற்சாகங்கள் பிறக்கும். தொழில் விரிவாக்கத்துக்கு அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலமும் ஏற்படும்.
தனுசு sagittarius-thanusu
உங்கள் இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரிகளுக்குப் பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம் scorpio-viruchagam
குடும்பத்தில் ஒற்றுமை குறைவால் குழப்பங்கள் நிலவும். வீட்டில் எல்லா வகையிலும் மகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
கும்பம் aquarius-kumbam
வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று எல்லா வகையிலும் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும். பெண்களால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: