இன்றைய ராசிபலன் தேதி: புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017

0
1409

இன்றைய ராசிபலன்
தேதி: புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017

மேஷம்

உங்கள் வேலைத் திறமை மதிக்கப்படாது. குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும்.

ரிஷபம்

தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகளால் படுத்தவுடன் தூக்கம் வராது.

மிதுனம்

காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. ஆடைஆபரணங்கள் சேரும். குழந்தைகள் பால் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.

கன்னி

கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். புதிய இடங்களுக்கு திடீர் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஒற்றுமை குறைவால் உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.

மகரம்

அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை. அலட்சியம் அல்லல் தரும். பிறருக்கு நல்லதே நினைக்கும் எண்ணத்தைக் கைக்கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.

கடகம்

ஓரளவே தனலாபம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருப்பது அரிது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் நன்கு படித்தாலன்றி கரைதேறுவது கடினம்.

சிம்மம்

மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புக்களை அடைவீர்கள்.

துலாம்

நம்பிக்கைக்கு உரியவர்களின் நட்பு கிடைக்கும். காரியம் அனைத்திலும் வெற்றி நிச்சியம். எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.

மீனம்

பயணத்தில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும் உண்டாகும்.

தனுசு

தொழில்முறைப் பயணங்களில் வெற்றி கிட்டும். தெய்வ சிந்தனை அதிகரித்து கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். சிலருக்குக் குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும்.

விருச்சிகம்

புதிய வேலைக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நேர்காணலில் வெற்றி கிடைக்கும். அரசு ஆதரவால் கட்டளையிடும் உயர்பதவி கிடைக்கும்.

கும்பம்

வாக்கால் வளமை உண்டு. புதியன கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாய் நடக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: