இன்றைய ராசிபலன்: தேதி: ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ட் 2017

0
330

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ட் 2017

மேஷம்
aries-mesham
சாதுர்யமான பேச்சால் சகலமானவர்களையும் சமாளித்துவிடுவீர்கள். வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
வெற்றியைத் தவிர வேறொன்றுமில்லை. நண்பர்களின் உதவி நலம் பயக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழுந்தாலும், எதிர்பார்த்த கடன்கள் வரத் தாமதமாகும்.
மிதுனம்
gemini-mithunum
ஆரோக்கியத்தைப் பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும்.
கன்னி
virgo-kanni
மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்பார்த்த அளவுக்கு வரவினங்கள் இருக்காது. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுக.
மகரம்
capricorn-magaram
புதிய உத்தியோக வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். அனைத்துப் பணிகளும் அனுகூலமான திசைகளில் நகரும். அரசு அதிகாரிகள் மூலமாக எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி வரும்.
கடகம்
cancer-kadagam
வேலை அதிகமாகி வேண்டாத அலைச்சல்களால் ஓய்வு குறையும். அம்மாவின் ஆரோக்கியத்தை அக்கறையுடன் பேண வேண்டிய நாள். தொழிலில் புதிய முயற்சிகளைக் கைவிடுவது நல்லது.
சிம்மம்
leo-simmam
மகிழ்ச்சியான மனநிலை தேகத்தில் தெம்பைத் தரும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் குளிரும். குழந்தைகள் பால் பாசம் பொழிவீர்கள். தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
துலாம்
libra-thulam
ஆசைகள் நிறைவேறி அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும்.
மீனம்
pisces-meenam
விளையாட்டாக இருக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணாதீர்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
தனுசு
sagittarius-thanusu
பெண்களின் நட்பால் புதிய சுகம் ஏற்படும். அக்கறையுடன் படித்து மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். தொழில், தொல்லைகள் குறைந்து, வியாபாரத்தில் எல்லைகள் விரியும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அன்றாட வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து ஏற்றம் தரும். குழப்பவாதி மனைவியால் உறவுகளிடையே மனக்கசப்பு ஏற்படும். வாடிக்கையாளர் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
வாழ்க்கையில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இனிய உல்லாசப் பயணங்கள் ஏற்படும். சுகம் சந்தோஷம் கூடும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: