இன்றைய ராசிபலன் தேதி: சனிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2017

0
710

இன்றைய ராசிபலன் தேதி: சனிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2017

மேஷம்
aries-mesham
சாமர்த்தியத்தால் மிகப் பெரிய காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் அதிகாரிகளின் உதவியால் ஆதாயம் அடைவீர்கள். மனைவியால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்
taurus-rishibum
பயணத்தால் பலவித நன்மைகள் ஏற்படும். பலவழிகளிலும் தனவரவு உண்டு. சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். புதிய தோழிகளின் தோழமை கிடைக்கும்.

மிதுனம்
gemini-mithunum
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் உண்டாகும். பகைவர்கள் விலகி ஓடுவர். குழந்தைகள் மீது அன்பும், பாசமும் பெருகும்.

கன்னி
virgo-kanni
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாள். பணியில் அலட்சியப் போக்குகள் அல்லல் தரலாம். தொழிலில் முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.

மகரம்
capricorn-magaram
அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களிலும் வெற்றியும் கிடைக்கும். அறிவு விருத்தியும், புத்தி தெளிவும் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்ற வாய்ப்புக்கள் தேடி வரும்.

கடகம்
cancer-kadagam
பெற்றதாயின் உடல் நிலையைப் பேணுதல் அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். வாகன சுகம் குறையும்.

சிம்மம்
leo-simmam
மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். தனவரவும், புதிய நண்பர்களின் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கி உதவிகள் கிடைக்கும்.

துலாம்
libra-thulam
பெற்றோர் மீது அன்பும், பாசமும் பெருகும். அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும். பணவரவால் மனத் திருப்தி உண்டாகும்.

மீனம்
pisces-meenam
உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் முன்னேற்றம் இருக்கும். மனதில் நினைத்தபடி எதுவும் நடக்காது. திடீர் நடுக்கமும். பயமும் ஏற்படும். எதிலும் நிதானமாக நடக்கவேண்டிய நாள்.

தனுசு
sagittarius-thanusu
பெண்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நல்ல வாகன யோகம் உண்டு. அரசுப் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.

விருச்சிகம்
scorpio-viruchagam
பணமில்லாத நேரத்தில் பெண்கள் வீண்செலவுகள் செய்து வெறுப்பளிப்பர். கடின உழைப்பின் காரணமாக உண்ணவும் நேரம் இருக்காது. கோபம், பொறாமை குணங்களைக் குறைத்தால் நிம்மதி பிறக்கும்.

கும்பம்
aquarius-kumbam
பாக்கிய விருத்தி ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படலாம். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புகழும், கௌரவமும் ஓங்கும். இனிய பயணங்களால் இதயத்தில் இன்பம் பொங்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: