இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்

0
265

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்
தேதி: சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017

மேஷம்
வீண் கோபத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அக்கம் பக்கத்தாருடன் அளவாகப் பழகவும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.

ரிஷபம்
இன்பச் சுற்றுலா, நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். நல்ல, ருசியான உணவுவகைகள் கிடைக்கும்.

மிதுனம்
தனலாபம், நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி
புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் சந்தோஷம் ஏற்படும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடிக் கிடைக்கும். கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை.

மகரம்
வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிலில் ஆதாயம் பெருகும்.

கடகம்
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.

சிம்மம்
இன்று, சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.

துலாம்
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். புதிய பரிசுப் பொருட்கள் கிடைத்து, வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

மீனம்
பெரியவர்களின் அன்பும், பாசமும் தெம்பைத் தரும். எதிர்பார்த்த தனலாபங்கள் ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். சாத்திரங்களில் தேர்ந்து ஆராய்ச்சி மனப்பான்மை மேலோங்கும்.

தனுசு
எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள்.

விருச்சிகம்
பயணங்களில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
எதிர்பார்த்த தனவரவுகள் இருக்காது. வீட்டில் நிம்மதி இன்மை காரணமாக குழப்பங்கள் ஏற்படலாம். தோல்வி பயத்தால் முன்னேற்றம் தடைப்படும். வாக்குவாதத்தால் வீண் பகை ஏற்படும்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017
ஆவணி
24
சங்கடகர சதுர்த்தி
நல்ல நேரம்
காலை: 10:30AM – 11:30AM
மாலை: 4:30PM – 5:30PM
இராகுகாலம்
காலை: 9:00AM – 10:30AM
இரவு: 3:00AM – 4:30AM
எமகண்டம்
பகல்: 1:30PM – 3:00PM
இரவு: 7:30PM – 9:00PM

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: