இன்றைய நாள் எப்படி 19-09-2017

0
203

தேதி: செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017

மேஷம்
இன்றையச் செயல்பாடுகள் அனைத்திலும் தொய்வு உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கிடைக்கும். குழந்நைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

ரிஷபம்
தாய் சொல்லைத் தட்டாதீர். அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணிவுத் தன்மை இல்லையெனில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் ஓரளவே சிறப்பாக அமையும்.

மிதுனம்
சிங்கம் போல ஸ்டெரங்ந்த் எனக்கு என தைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும்.

கன்னி
இடமாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் பணமுடை ஏற்படலாம். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்
மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. மனைவியின் வாய்த்துடுக்கால் மற்றவர்களுடன் பகை ஏற்படும்.

கடகம்
மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவு மருத்துவச் செலவைத் தரும். எடுத்த காரியங்கள் தொல்வி அடைவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல்படி ஆகும்.

சிம்மம்
எதிர்பாராத இடங்களிலிருந்தும் பல வழிகளிலும் பணவரவு ஏற்படலாம். தொழிலில் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பெரியோர்கள், நண்பர்கள் சந்திப்பால் நல்முன்னேற்றங்கள் ஏற்படும்.

துலாம்
பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

மீனம்
தனவரவு கூடும். திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். கல்வியில் சிறப்பு அடைவர். நண்பர்களால் உதவி உண்டு. சொந்த வீடு, நிலம் அமையும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு
தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதின் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்
சந்தோஷ அனுபவங்கள் கூடும். குழந்தைகளின் திறமை கண்டு மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.

கும்பம்
ஆரோக்கிய நிலை மேம்படும். தொழில் புரிபவர்களுக்குப் பேச்சே மூலதனமாய் அமையும். வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்கள் ஏற்படும். சிலர் காதல் வயப்பட நேரும்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017
புரட்டாசி
3
மகாளய அமாவாசை, கிருஷ்ண அங்காரக சதுர்த்தி
நல்ல நேரம்
காலை: 8:00AM – 9:00AM
பகல்: 2:00PM – 3:00PM
இராகுகாலம்
பகல்: 3:00PM – 4:30PM
இரவு: 9:00PM – 10:30PM
எமகண்டம்
காலை: 9:00AM – 10:30AM
இரவு: 1:30AM – 3:00AM

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: