இன்று யாழில் கையில் கோழி­யு­டன் சென்­ற­தால் நடந்த விபரீதம்!

0
73

இன்று யாழில் கையில் கோழி­யு­டன் சென்­ற­தால் நடந்த விபரீதம்

கோழி­யு­டன் சாலையில்:இர­வில் ஒரு கையில் கோழி­யு­டன் சாலையில் சென்­று­கொண்­டி­ருந்­த­வரை வழி­ம­றித்த இளை­ஞர்­கள் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னர். பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட அவரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

கோழி சிக்­கி­ய­தா­:இந்­தச் சம்­ப­வம் மட்­டு­வி­லில் சில நாள்­க­ளுக்­கு­முன்­னர் இடம்­பெற்­றது. சாலையில் மேட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது சைக்­கி­ளுக்­குள் கோழி சிக்­கி­ய­தா­க­வும் அந்­தக் கோழியைக் கையில் எடுத்­துக்­கொண்டு அதன் உரி­மை­யா­ள­ரி­டம் கொடுப்­ப­தற்­குச் சென்­ற­தா­க­வும் அதன்­போதே தன்­னைக் கோழிக் கள்­ளன் என்­று­கூ­றித் தாக்­கி­னர் என்று சந்­தே­க­ந­பர் கூறி­னார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சாவ­கச்­சேரி நீதி­மன்­றில்:தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் நபரை இளை­ஞர்­கள் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­த­னர். கையில் பாதிப்பு ஏற்­பட்ட நிலை­யில் பொலி­ஸா­ரால் மருத்­து­வ­ம­னை­யில் அவர் சேர்க்­கப்­பட்­டார். சிகிச்­சை­யின் பின்­னர் அவ­ரைச் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தி­ய­போது 14 நாள்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: