இந்த வார ராசி பலன்கள்! 25.11.2017 முதல் 1.12.2017 வரை!

0
214

இந்த வார ராசி பலன்கள்! 25.11.2017 முதல் 1.12.2017 வரை!

மேஷம்

சூரியனின் பார்வை காரணமாக இருப்பதால் தடைகள் நீங்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சமூகத்தில் பதவி, அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். புதனின் அமைப்பு காரணமாக சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவீர்கள். சகோதரர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். கணவன்மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் மறையும். பெண்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வேலைச்சுமை குறையும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். பக்தர்களுக்கு பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி விநியோகம் செய்யலாம்.

ரிஷபம்

தன, வாக்கு ஸ்தான பலம் காரணமாக பணத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு சுபயோக சுபநேரம் வந்துள்ளது. சூரியன் சாதகமாக இருப்பதால் வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வீடு அமையும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் நலமடைவார்கள். கடல் கடந்து செல்வதற்கான விசா கை வந்து சேரும். அலுவலக பணி காரணமாக குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தங்க நேரிடும். கண் சம்பந்தமாக சில உபாதைகள் வந்து நீங்கும். சமையலறைக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் உங்கள் கணிப்புகள் வெற்றி தரும்.

பரிகாரம்:

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவலாம்.

மிதுனம்

ஏற்றங்கள், மாற்றங்கள் வரும். அவசியத் தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ராசியை புதன் பார்ப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. இடமாற்றங்கள் சற்று தள்ளிப்போகும். செவ்வாயின் அமைப்பு காரணமாக அலைச்சல், பயணங்கள் இருக்கும். தடைபட்ட கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். சுக்கிரன் மூலம் சுபச் செலவுகள் உண்டாகும். நான்கு சக்கர வண்டி வாங்கும் யோகம் உள்ளது. குழந்தைகள் உடல்நலம் காரணமாக மருத்துவச் செலவுகள் இருக்கும். இஷ்ட தெய்வ ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

பரிகாரம்:

புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி வணங்கலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவச் செலவிற்கு உதவலாம்.

கடகம்

செவ்வாயின் பார்வை யோகமாக இருப்பதால் சொத்து சம்பந்தமாக நல்ல முடிவுகள் வரும். 7ல் கேது தொடர்வதால் நண்பர்களுடன் உல்லாசம், சுற்றுலா போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். சுக்கிரன் சுபமாக இருப்பதால் பெண்கள் விரும்பிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். தொழிலில் லாபம் உண்டு. டிராவல்ஸ், டூரிஸ்ட் தொழில், கமிஷன், கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட் லாபகரமாக நடக்கும்.

சந்திராஷ்டமம்:

26.11.2017 அதிகாலை 2.02 முதல் 28.11.2017 காலை 11.15 வரை.

பரிகாரம்:

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம். துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவலாம்.

சிம்மம்

ராசிநாதன் சூரியன் பலமாக இருப்பதால் குதூகலம் மனநிறைவு உண்டு. புதிய எண்ணங்கள், திட்டங்கள் போடுவீர்கள். சுக்கிரன் அருளால் பண வரவு, பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். 2ல் செவ்வாய் இருப்பதால் நிறை, குறை உண்டு. தாயார் மூலம் மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளால் சில வருத்தங்கள் வரலாம். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டமம்:

28.11.2017 காலை 11.16 முதல் 30.11.2017 மாலை 4.12 வரை.

பரிகாரம்:

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை தரிசிக்கலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம்.

கன்னி

ராசியில் செவ்வாய் இருப்பதால் மனக்குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். சகோதர உறவுகளுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். சுக்கிரன் சொந்த வீட்டை பார்ப்பதால் பெண் மூலம் லாபம், சந்தோஷம் உண்டு. சனி பகவானின் பார்வை காரணமாக இடமாற்றத்திற்கு வாய்ப்புண்டு. பயணத்தின்போது உடைமைகளை சரிபார்ப்பது அவசியம். ஷேர் மற்றும் வட்டி மூலம் பணம் வரும். ெதாழில் லாபகரமாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கைக்கு வந்து சேரும். பிரின்டிங், பேப்பர், பதிப்பகத் தொழிலில் லாபம் கொழிக்கும்.

சந்திராஷ்டமம்:

30.11.2017 மாலை 4.13 முதல் 2.12.2017 மாலை 5.27 வரை.

பரிகாரம்:

கோயம்புத்தூர் ஈச்சனாரி விநாயகருக்கு அருறுகம்புல் சாத்தி வணங்கலாம். பக்தர்களுக்கு பால் பாயாசத்தை பிரசாதமாகத் தரலாம்.

துலாம்

வரவு, செலவு, அனுகூலம், அலைச்சல், மகிழ்ச்சி, சோர்வு என கலவையான பலன்கள் இருக்கும். புதன் பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். குரு ராசிக்குள்ளேயே இருப்பதால் எதையாவது சிந்தித்து குழப்பிக் கொள்வீர்கள். சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். வியாபாரம் சீராக இருக்கும். வாய் மூலம் பேசி தொழில் செய்பவர்களுக்கு திடீர் யோகம் உண்டு.

பரிகாரம்:

கும்பகோணம் அருகில் அய்யாவடி பிரத்தியங்கிரா தேவியை வழிபடலாம். பக்தர்களுக்கு தயிர்சாதத்தை பிரசாதமாகத் தரலாம்.

விருச்சிகம்

குருவின் பார்வை காரணமாக நீண்ட நாள் தடைபட்டுக்கொண்டிருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். மருத்துவச் செலவுகள் பெருமளவு குறையும். ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்குவீர்கள். சுக்கிரன் அருளால் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. இல்லறம் இனிக்கும். கடல் கடந்து செல்வதற்கான நேரம் வந்துள்ளது. மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். உத்யோகத்தில் சாதகமான காற்று வீசும். வியாபாரம் சீராக இருக்கும். பணப்புழக்கம் உண்டு. வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரணையாகச் செல்லவும்.

பரிகாரம்:

திருவள்ளூர் வீரராகவப் பெருமாளை தரிசிக்கலாம். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கலை பிரசாதமாகத் தரலாம்.

தனுசு

குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் மனக்குழப்பங்கள் மறையும். சுபநிகழ்ச்சிகளுக்கு அச்சாரம் போடுவீர்கள். புதனின் பார்வை வலுவாக இருப்பதால் போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். மகனிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கைமாத்து கொடுத்த பணம் கைவந்து சேரும். ஆன்மிக தாகம் அதிகரிக்கும். பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் அதிலே கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

பரிகாரம்:

மதுராந்தகம் ஏரிகாத்த ராமரை தரிசித்து வணங்கலாம். பக்தர்களுக்கு வெண்பொங்கலை பிரசாதமாகத் தரலாம்.

மகரம்

செவ்வாயின் பார்வை காரணமாக சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். சொத்து சம்பந்தமாக நல்ல முடிவுகள் வரும். சுக்கிரனின் பார்வை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் உண்டு. அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள். ராகு 7ல் தொடர்வதால் அக்கம் பக்கத்தினருடன் அதிக நெருக்கம் வேண்டாம். கன்னிப்பெண்கள் பெற்றோரின் அறிவுரையை கேட்பது நலம் தரும். புதன் பார்வை காரணமாக வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னாரை தாிசித்து வழிபடலாம். இல்லாதோர் இயலாதோருக்கு இயன்றதை வழங்கலாம்.

கும்பம்

ராசிநாதன் சனி நல்ல அமைப்பில் இருப்பதால் சுபபலம் உண்டு. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. புதன் சொந்த வீட்டைப் பார்ப்பதால் நீண்டகாலமாக வராத பணம் வசூலாகும். வேலை சம்பந்தமாக நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றிச் செய்தி வரும். காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வந்து நீங்கும். சுக்கிரன் அருளால் பொன், பொருள் சேரும். மனைவி வழி உறவுகளிடையே மரியாதை, செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு தேடிவரும்.

பரிகாரம்:

சிவலிங்க அபிஷேகத்திற்கு சந்தனம், தேன் வாங்கித் தரலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உடை, போர்வை வழங்கலாம்.

மீனம்

யோக அமைப்புகள் கூடிவருவதால் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் உண்டு. குருவின் பார்வையால் கல்யாணப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடியும். செவ்வாய் அம்சம் காரணமாக சொத்தில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். ராகு 5ல் இருப்பதால் சதா சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். அலுவலகத்தில் சாதகமான நிலை இருக்கும். உங்கள் மனம்போல் இடமாற்றத்திற்கு வாய்ப்புண்டு. தொழிலில் ஏற்றம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் சில சங்கடங்கள் வரும்.

பரிகாரம்:

சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். உடல் ஊனமுற்றோர், தொழுநோயாளிகளுக்கு உதவலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: