இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – கொந்தளித்த ஜீ.வி.பிரகாஷ்

0
182

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – கொந்தளித்த ஜீ.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். நடிகராகவும் ஜெயித்து விட்ட இவர் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை போன்ற சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இன்று நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா 1176 மதிப்பெண் எடுத்தும் மருத்துவராக முடியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் நெட்டிசன்கள் வருத்தத்துடன் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதில் அனிதாவின் புகைப்படத்தோடு, தமிழக மருத்துவ மாணவர்களின் உரிமையை பறிக்கும் Neet தேர்வை நிரந்தரமாக நீக்கு.. ஓட்டுக்கு பணம் கொடுத்த, பணம் வாங்கிய ஒவ்வொருவரும் குற்றவாளி.. இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: