இந்த அழகான பொண்ணு சில வருடங்கள் முன்னாடி எப்படி இருந்தார் தெரியுமா! வைரலாகும் புகைப்படம் உள்ளே!

0
184

தனது சொந்த தாத்தாவால் பட்டினி போடப்பட்டு, எலும்புக் கூடாக்கப்பட்ட கதையை பல வருடங்களுக்குப் பின்னர் அந்த பெண்ணே வெளியிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன், அவர் எடுத்த செல்ஃபிக்கள் கண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

வெறும் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அந்தப் பெண், இந்த நிலைக்கு ஆளாவதற்கு அவளது சொந்த தாத்தாவே காரணமாக இருந்தார் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.

அவளுக்கு சாப்பாடே கொடுக்கப்படுவதில்லை, எப்போதாவது அவள் சாப்பாட்டைத் திருடி சாப்பிடுவதை அவளது தாத்தா கண்டுபிடித்து விட்டால், அவளது வயிற்றில் மிதித்து அவளை வாந்தி எடுக்க வைத்து விடுவாராம் அந்த கொடுமைக்கார தாத்தா.

இந்த படங்களைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று நம்ப முடியவில்லை இல்லையா?பலருக்கும் இந்த சந்தேகம் ஏற்படத்தான் செய்தது.

ஃபோட்டோ ஷாப் செய்யப்பட்ட படங்களை, அவர் வெளியிட்டு ஏமாற்றுவதாக சமூக ஊடகங்கள் அவரைத் திட்டித் தீர்த்தன.

அதன் தொடர்ச்சியாக, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை அவர் பதிவிட்டிருந்தார். அவற்றில் அவரது உடலில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.

மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது, இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஜப்பானின் Kyoto நகரைச் சேர்ந்த அந்த பெண், தற்போது தனது இருபதுகளில் இருக்கிறார். அவர் இப்போது நன்றாக இருப்பதாகவும், பழைய கசப்பான நினைவுகளிலிருந்து மீண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது தாத்தா மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, அந்த நேரத்தில் அவரது பெற்றோர்கள் எங்கிருந்தார்கள் என்பது குறித்த எந்த தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.

எலும்பும் தோலுமாக
எலும்பும் தோலுமாக
மீட்கப்பட்ட பெண்
மீட்கப்பட்ட பெண்
எப்படியிருக்கிறார்
எப்படியிருக்கிறார்

வைரல் வீடியோ..

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: