இந்தியாவில் விசம் அருந்தி இலங்கை இளைஞன் தற்கொலை!

0
56

இந்தியாவில் விசம் அருந்தி இலங்கை இளைஞன் தற்கொலை!

தமிழகத்தின் இராமநாதபுரம் அகதி முகாமில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இளைஞன் விஷம் அருந்தி இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த இளைஞனும் அவருடைய பெற்றோரும், இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில் அவரின் பெற்றோர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்து யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞன் அகதி முகாமில் தங்கியிருந்து மூன்று வருட டிப்ளோமா பாடநெறியை கற்று வந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்கொலைக்கான காரணம் கண்டறிப்படவில்லை.

இந்த நிலையில், விசாரணைகளில் பின்னர் இளைஞனின் உடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வர உதவியளிக்குமாறு அவரது உறவினர்கள் யாழ். இந்திய துணைத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்து தமிழக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: