இட்லியால் போனது வாலிபரின் உயிர்.!சோகத்தில் ஆழ்த்திய‌ சம்பவம்.!!

0
64

இட்லியால் போனது வாலிபரின் உயிர்.!சோகத்தில் ஆழ்த்திய‌ சம்பவம்.!!
பொங்கலை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் களை கட்டியது.

இந்நிலையில் புதுகோட்டை மாவட்டத்தில் பொங்கல் அன்று ஒரு வித்தியாசமான விளையாட்டு போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.அதில் புதுகோட்டை அடுத்த அறந்தாங்கியில் இட்லி சாப்பிடும் போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக இட்லியை சாப்பிடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.இதில் பலர் ஆவலுடன் பங்கேற்ற போட்டியாளர்கள் வேகமாக இட்லியை சாப்பிட தொடங்கியுள்ளனர்.

அப்போது சின்ன தம்பி என்ற வாலிபர் போட்டியில் வெற்றி பெற வேண்டும் நோக்கில் மிக வேகமாக இட்லியை சாப்பிட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக தொண்டையில் இட்லி சிக்கியதால் சின்ன தம்பி சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இந்த சம்பவத்தால் திருவிழா போல் காட்சியளித்த அந்த பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: