இடுப்பில் வேப்பிலை கழுத்தில் மண்டை ஓடுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நபர்!

0
31

இடுப்பில் வேப்பிலை கழுத்தில் மண்டை ஓடுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவரை தடுத்த போலீஸ் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது, சூலூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(35) என்பவர்,

தாய் அங்கம்மாள் பெயரில் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் வந்தார். இவர் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நேற்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து இடுப்பில் வேப்பி

லை கட்டி,கழுத்தில் மண்டை ஓடுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது சரவணகுமார் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: