இச்சாதாரி பாம்புகள் மனிதனாக உருமாறுமாம் இது உண்மையா! பாம்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

0
141

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், இந்த பழமொழி பாம்பினை பார்த்து அஞ்சுபவர்களுக்கு மட்டுமே.

பாம்பு பற்றி சில உண்மைகள்
மனிதர்களைப் போன்று பாம்பு மூக்கினால் சுவாசிப்பதில்லை, நாக்குகளால் சுவாசிக்கிறது, அடிக்கடி நாக்கை வெளியே நீட்டி சுவாசிக்கும். மோப்பமும் பிடிக்கும், அதற்கு காதுகள் கிடையாது, தன்னை சுற்றியிருக்கும் அதிர்வுகளை மட்டுமே உணரும்.

அதன் கண்களுக்கு இமைகள் கிடையாது, எப்போதும் விழித்துப் பார்த்தபடி இருக்கும், தலையின் பக்கவாட்டில் இரண்டு பக்கத்திலும் கண்கள் இருக்கும்.

அதனால் 180 டிகிரி வரைக்கும் சுழற்றி பார்க்கும் சக்தி கொண்டது, இதன் செதில்கள் எப்படிப்பட்ட இடத்திலும் உறுதியாக பற்றிச் செல்ல வசதியாக இருக்கிறது, வேகமாக மரம் ஏறவும் இந்த செதில்கள் உதவுகிறது.

இச்சாதாரி பாம்புகள்
பாம்புகளில் பல்வேறு வகைகள் உள்ளன, இதில் ஒன்றுதான் இச்சாதாரி பாம்புகள்.

‘இச்சாதாரி’ என்கிற ஒருவகை பாம்பு 100 ஆண்டுகள் வாழ்ந்து, பலவித அற்புத சக்திகளை பெற்றுவிடும், பிறகு அது மனித உருவெடுத்து மனிதர்கள் மத்தியில் வாழும். இந்த நாகம் தன்னை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக மனித உருவெடுத்து வரும்.

நல்ல மனிதர்களுக்கு இந்த ‘இச்சாதாரி’ பாம்புகள் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் என்றும், கெட்டவர்களை பழிவாங்கும் என்றும் கூறப்படுகிறது..

இச்சாதாரி நாகம் பல உருவம் மாறும் தன்மை உடையது என இந்திய புராணங்கள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலம் அறியப்படும் ஓர் கூற்றாகும். முக்கியமாக இது மனித வடிவில் உருமாறும் என்ற கூற்றும் பல காலமாக நிலவி வருகிறது.இச்சாதாரி நாகம் வைரத்தை விட விலை உயர்ந்த மாணிக்க கல்லை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.இந்த மாணிக்க கல்லை திருட முயன்று பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என புனைவுகள் பல காணப்படுகின்றன.இந்த இச்சாதாரி பாம்பை மகுடி ஊதி தான் கட்டுப்படுத்த முடியும் எனவும் புனைவுகள் காணப்படுகிறது.

இச்சாதாரி நாகம் பற்றிய பல காமிக் கதைகள் இருக்கின்றன. நாகராஜ் என்ற பாம்பை பற்றிய சூப்பர் ஹீரோ காமிக் கதையில் கூட இது சார்ந்டாஹ் நிறைய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.
துசி (Tausi) எனும் இந்தி காமிக்கில் கூட மனிதனாக உருமாறும் பாம்பை பற்றிய புனைவுகள் இருக்கின்றன. பல குழந்தை சிறுகதைகளில் இது போன்ற புனைவுகள் காணப்படுகின்றன.
பாலிவுட்டில், 1954ம் ஆண்டு நாகின் என்ற படத்திலும், 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த நாகினா என்ற படத்திலும், 1976ம் ஆண்டு ரீனாராய் நடித்த நாகின் என்ற படத்திலும் கூட இந்த பாம்பை பற்றிய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.

ஆனால் இவை அனைத்தும் கட்டுக்கதையே, பாம்பின் சராசரி ஆயுட்காலமே 30 ஆண்டுகள்தான். அதையும் தாண்டி எந்த பாம்பும் 100 ஆண்டு வாழாது, மனித உருவுமும் எடுக்காது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: