இங்கிலாந்திலிருந்து யாழ் சென்ற நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

0
47

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்த ஒருவரை தாக்கி தள்ளிவிட்டு அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கொள்ளையடித்து சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைப்பிரஜாவுரிமை கொண்ட குறித்த நபர் கடந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் யாழ். ஊர்காவற்துறையில் தங்கியிருந்து வியாபாரம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகர் சின்னாலடி பகுதியில் குறித்த நபர் சென்றுகொண்டிருந்த போது அவரை துரத்தி வந்த மூவர் குறித்த நபரை தாக்கி, மோட்டார் சைக்களில் இருந்து தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடியதுன், வெளிநாட்டு நாணயங்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையின் பெறுமதி 412,460 ரூபாய் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 27, 31, 32 வயதுகளை உடையவர்களாகும்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: