ஆண், பெண் சட்டைகளில் பட்டன்கள் நேரெதிர் பக்கம் அமைந்திருப்பது ஏன் என்று என்றாவது யோசித்துள்ளீர்களா!

0
159

இந்த விஷயம் தெரிந்த சிலருக்கும் கூட, இந்த அமைப்பு எதற்காக பின்பற்றப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து தெரியாது.

சிலருக்கு இந்த விஷயம் தெரியாமல் கூட இருக்கலாம். ஆம், ஆண்களின் சட்டையில் பட்டன்கள் வலதுபுறமும், பெண்களின் சட்டையில் பட்டன்கள் இடதுபுறமும் அமைந்திருக்கும்.

இந்த விஷயம் தெரிந்த சிலருக்கும் கூட, இந்த அமைப்பு எதற்காக பின்பற்றப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து தெரியாது.

மண்டையைப் குழப்பும் இந்த விஷயத்திற்கு பின்னணியில், இதற்கு இவை எல்லாம் தான் காரணம் என ஒருசில தியரிகளும், கூற்றுகளும் கூறப்படுகின்றன.

ஆனால், இதுதான் சரியான காரணம் என இதுநாள் வரை எதுவும் ஊர்ஜிதமாக நிரூபிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

இனி, இதன் பின்னணியில் கூறப்படும் காரணங்கள் குறித்து பார்க்கலாம்….

காரணம் 1

பழங்காலத்தில் வசதியான ஆங்கிலேயே பெண்களுக்கு அவர்களது பணிப்பெண்கள் தான் ஆடை உடுத்தி விடுவார்கள்.

இதற்கு, காரணம் ஆண்களின் உடைகள் மிக எளிமையாக உடுத்தும் வகையிலும். பெண்களின் ஆடை, சிலரின் உதவியோடு உடுத்தும் வகையில் கடினமாக இருந்ததுதான்.

காரணம் 2

பெரும்பாலும், அனைவரும் வலது கை பழக்கம் உடையவர்களாக தான் இருப்பார்கள். எனவே, பணிப்பெண் உடுத்திவிடும் போதும் வசதியாக இருப்பதற்காக தான் பெண்களின் சட்டைகளில் பட்டன்கள் இடதுபக்கமாக வைக்கப்பட்டன. அது, இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

காரணம் 3

போர் காலங்களில் ஆண்கள் தங்கள் வலது கைகளில் கத்தி வைத்திருப்பார்கள். இதனால், இடது கை மூலமாக அவர்களது சட்டை பட்டன்களை அவிழ்ப்பது அவர்களது எளிதாக இருக்கும்.

அதனால் கூட, ஆண்களின் சட்டைகளுக்கு வலது பக்கமாக பட்டன்கள் வைத்திருக்கலாம்.

காரணம் 4

மேலும், பெண்கள் இடது மார் மூலமாக தான் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவார்கள். இதற்கு இடது பக்கமாக பட்டன்கள் இருந்தால் தான் சற்று எளிதாக இருக்கும்.

இதுக் கூட பெண்களின் சட்டைகளுக்கு இடது பக்கமாக பட்டன் அமைந்திருப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

காரணம் 5

ஒரு தியரியில், பெண்களின் ஆடைகளை பெண்களே தான் ஆடை வடிவமைப்பு செய்துக் கொண்டனர் என்றும். அதில், பட்டன் வைப்பதும் கூட அவர்களே, அவரவர் உடைகளுக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால், அவர்கள் இடது புறமாக வைத்திருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

காரணம் 6

முந்தைய காலங்களில் பெண்களுக்கான உடைகள் வடிவமைத்து, அவர்களுக்கான கலை வேலைகள் செய்ததென அனைத்தும் பெண்கள் தான்.

ஆதலால் கூட இந்த பட்டன் அமைப்பு மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கருத்தும், முன்பு கூறப்பட்டிருந்த தியரியும் ஒரே மாதிரி ஒத்துப்போகிறது.

ஆயினும் கூட இது தான் உண்மையான காரணம் என எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

இதையும் படிக்கலாமே!

இது மட்டும் போதும்: எந்த நோயும் அண்டாது!

இருமல், சளி, காய்ச்சல் என்றவுடனேயே மருத்துவரை நாடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே கட்டுப்படுத்தலாம்.

உணவே மருந்து என்ற கூற்றுப்படி சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் மூலம் சூப் தயாரித்து அருந்துவது பலனை தரும்.

சூப் உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

நம் பாரம்பரிய சமையலில் ஒன்று ரசம், இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப். நம்முடைய மிளகு ரசத்துக்கு இணையான சத்து உள்ள சூப், எதுவுமே இல்லை என்பதே உண்மை.

ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள் உடலுக்கு நல்லது. நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும், அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும்.

தேவையான பொருட்கள்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – சிறிதளவு
கிராம்பு – 7
தண்ணீர் – 750 ml
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, 1/2 டீஸ்பூன் சீரகம், மிளகு, மஞ்சள் தூள் மற்றும் தனியாவை சேர்க்கவும்.

நன்கு கிளறிய பின்னர் இதனுடன் பட்டை, கிராம்பு, இஞ்சி சேர்த்து தேவையான உப்பை சேர்த்து கிளறவும்.

பின்னர் தண்ணீரை ஊற்றி, மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வைக்கவும்.

சூப்பில் இருக்கும் தண்ணீரை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும், இதனுடன் தேன் கலந்தால் சுவையான சூப் ரெடி.

காலை, மாலை என இருவேளைகளுக்கு இதனை பருகி வந்தால் உடல் வலி சரியாகும், சளித்தொல்லை உள்ளவர்கள் இதை பருகுவது பலனைத் தரும்.

யாருக்கு என்ன சூப்?

டிபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமாக உள்ளவர்கள், தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டன் சூப்
கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு நெஞ்சு எலும்பு சூப்
பிறந்து ஆறு மாதமே ஆன குழந்தைக்கு வெஜ் பாயில் சூப்
கீரைகளைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு, கீரை சூப் மற்றும் தக்காளி சூப்
எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, மட்டன், சிக்கன் சூப்
நார்மலாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, வெஜ் சூப் என கொடுக்கலாம்
குறிப்பாக அசைவ சூப்களை தொடர்ந்து குடிக்கக்கூடாது, இது கொழுப்புச் சத்தை அதிகரிக்கச் செய்து, வேறு பிரச்னைகளுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: