ஆண்களை போட்டி போட்டு வாங்கிய பெண்கள்! 1 மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? ஆண்கள் விற்கும் கடை எங்கே தெரியுமா?

0
220

ஆண்களை போட்டி போட்டு வாங்கிய பெண்கள்! 1 மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா? ஆண்கள் விற்கும் கடை எங்கே தெரியுமா?

சீனாவில் ஆண் நண்பர்கள் இல்லாத பெண்களுக்காக கடை ஒன்று திறக்கப்பட்டதால் அங்கு பெண்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

சீனாவின் Haikou பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது.

அந்த ஷோ ரூம்பில் 6 அழகான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்கள் ஒரு பெட்டியின் உள்ளே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சரசாரியாக 6 அடி உயரம் இருந்தனர்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், சீனாவின் ஏராளமான பெண்கள் ஆண் நண்பர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.

போட்டி போட்டு வாங்கிய பெண்கள்
போட்டி போட்டு வாங்கிய பெண்கள்

இதனால் இந்த வருடம் அவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த ஷோ ரூம்மின் உரிமையாளர் 6 அழகான ஆண்களை அங்கிருக்கும் பெட்டி ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்.

அதன் பின் அந்த பெட்டியில் ஒரு QR கோடு ஒன்றை வைத்துள்ளார்.

அதில் உங்களுக்கு இவர் தேவையா, இவருடன் நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டுமா, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா, இவர் உங்களுக்கு ஒரு அருமையான நண்பர் போன்று இருப்பார், இவர்களில் ஒருவருடன் நீங்கள் ஒரு மணி நேரம் பொழுதை கழிப்பதற்கு 11p சீன மதிப்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த பெண்கள் உடனடியாக அங்கிருக்கும் ஷோ ரூம்மிற்கு சென்றுள்ளனர். ஆனால் அறிவிக்கப்பட்ட 6 நிமிடங்களிலே அந்த 6 ஆண்களும் வாடகைக்கு எடுத்துவிட்டதாகவும், சில பெண்கள் ஏமாற்றத்துடனே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது எனவும், இதனால் இந்த சலுகை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மட்டுமே என்றும் அதுவும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே என்ற நிபந்தனையும் உள்ளது.

இப்படி தங்கள் ஆண் நண்பர்களுடன் செல்லும் பெண்கள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியாது எனவும், அவர்கள் உங்களுக்கு ஒரு நண்பர் மட்டுமே எனவும், இந்த ஷாப்பிங் மாலில் மட்டுமே நீங்கள் அவர்களுடன் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதில் இருந்த ஒரு நபரை 20 வயது மதிக்கத்தக்க 4 பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

1 மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா
1 மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா

தற்போது கிறிஸ்துமஸ் முடிந்துள்ள நிலையில், இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

இதையும் கொஞ்சம் படியுங்க பாஸ்!

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்கள்!

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்கள்
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்கள்

பப்பாளியில் கலோரிகள், சர்க்கரை, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, புரோட்டீன், விட்டமின் A, B2, B3, B 6, B9, C, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பப்பாளி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே பப்பாளியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
பப்பாளியில் உள்ள அர்ஜினைன் என்னும் நொதி, ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல், இருமல் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.

பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள் வராமல் தடுக்க உதவுகிறது.
பப்பாளி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
பப்பாளியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சனை இருந்து பாதுகாக்கிறது.
ரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவுகிறது.

புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடுவதுடன், புற்றுநோய் தாக்கத்தில் இருந்து தடுக்கிறது.
குமட்டல், சோம்பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
பப்பாளியின் விதையை உலர வைத்து பொடி செய்து, அதனுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை, இரவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அழிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: