ஆண்களுடன் இருந்த நிலையில்! போதைப்பொருளுக்கு அடிமையான 3 பெண்கள் கைது!!

0
375

ஆண்களுடன் இருந்த நிலையில்! போதைப்பொருளுக்கு அடிமையான 3 பெண்கள் கைது!!

அநுராதபுரம் – யாழ்ப்பாணம் சந்தியில் நுவரவெவ வத்த பிரதேசத்தில் தற்காலிக விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2.50 கிராம் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விபசார தொழிலில் ஈடுபடும் போதைப் பொருளுக்கு அடிமையான 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் குளியாபிட்டி – தண்டகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் 23 முதல் 28 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் காலி, களனி – வனவாசல, குளியாபிட்டிய – நாக்கவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 22 முதல் 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் திருமண பந்தத்தில் இருந்து விலகியுள்ளவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: