அரியாலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனை சுட்டது யார்? சிக்கியது ஆதாரம்.

0
103

அரியாலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனை சுட்டது யார்? சிக்கியது ஆதாரம்.

அரியாலை துப்பாக்கி சூடு – தடயப்பொருள் விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிப்பு

அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாரிய விசாரணைகள் விசேட பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு கட்டமாக முப்படைகளையும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று கடற்படை முகாமில் விசாரணை நடத்தப்பட்டது.

தேடுதல் மேற்கொள்ளப்படவில்லை. இன்று விசேட அதிரடிப்படை முகாமில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த முச்சக்கர வண்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கைது நடவடிக்கை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: