அராலியில் காணாமல் போன சிறுமி பின் வளவில் மீட்கப்பட்டார்!!

0
56

அராலியில் காணாமல் போன சிறுமி பின் வளவில் மீட்கப்பட்டார்!!

யாழ் அராலி வடக்குப் பகுதில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் காணாமல் போனார். உறவினர்கள் எங்கும் தேடியும் குறித்த சிறுமியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தாயார் வட்டுக்கோட்டைப் பொலிசாரிடம் இரவு 9.30 மணியளவில் முறையிட்டுள்ளார். விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டைப் பொலிசார் குறித்த வீட்டுக்குச் சென்று தேடிய போது வீட்டின் பின் வளவில் சிறுமி உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்தனர்.

குறித்த சிறுமி எவ்வாறு அங்கு சென்றார்? என்ன காரணத்துக்காக சென்றார்? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய பொலிசார் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: