அப்பாவை கொன்று 12 ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்த மகள்: வெளியான உண்மை

0
55

பிரித்தானியாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவை மகள் கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்த நிலையில் தற்போது தானாக காவல் நிலையத்துக்கு சென்று உண்மையை கூறியுள்ளார்.

நாட்டின் கிரேட் மான்செஸ்டரில் உள்ள ரெட்டிஷ் பகுதியில் வசித்து வருபவர் பார்பரா கூம்பீஸ்(63), இவருக்கு இஸ்லே (29) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2005-ல் தனது தந்தை கினீத்தை கொலை செய்து விட்டு தனது தோட்டத்தில் புதைத்து விட்டதாக பொலிசில் சென்று பார்பரா கூறியுள்ளார்.

இதையடுத்து பார்பராவை கைது செய்த பொலிசார் அவர் வீட்டு தோட்டத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது உயிரோடு இருந்தால் கினீத்துக்கு 99 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து இஸ்லேவிடம் கருத்து கேட்ட போது அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

இதையடுத்து பார்பராவின் அக்கம்பக்கத்து வீட்டில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் கூறுகையில், கினீத் இறந்துவிட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்பரா எங்களிடம் கூறினார். ஆனால் சரியாக எந்த ஆண்டு என எங்களுக்கு நினைவில்லை.

அவர் எப்போதோ தனது கணவரை பிரிந்துவிட்டார். பார்பரா மிக அன்பான பெண், இது போன்ற காரியத்தை அவர் செய்தார் என எங்களால் நம்பமுடியவில்லை என கூறியுள்ளனர்.

இது மிகப்பெரிய வழக்கு என்பதால் பொலிசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் இது குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: