அக்காவை பழிவாங்குவதற்காக‌ தங்கையை காதலித்து திருமணம் செய்த சைக்கோ..!

0
79

பெங்களூரு பீன்யா பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி பிந்து. இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பின்பு மனைவியை சந்திரசேகர் அதிகளவு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட சந்திரசேகர் அவரது கையை முறித்துள்ளார். இது தொடர்பாக பிந்துவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிந்துவின் சகோதரியை சந்திரசேகர் பெண் கேட்டு வந்துள்ளார். ஆனால் பிந்துவின் சகோதரி சந்திரசேகரை பிடிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து பிந்துவை திருமணம் செய்ய கோரி வற்புறுத்தி வந்தார். அவர் பிடிகொடுக்கவில்லை. இதனால் அக்காவை பழிவாங்க திட்டமிட்டு 2 ஆண்டுகளாக அவரது தங்கை பிந்துவை பின் தொடர்ந்து அவரது மனதில் இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சிறிது நாட்கள் சந்தோஷமாக இருந்த சந்தோஷமாக பின்னர் பிந்துவை கொடுமை படுத்த ஆரம்பித்தார். குறிப்பாக பிந்துவின் அக்கா நினைவு வரும்போதெல்லாம் மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.

பிந்து கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: