அகத்திகீரையின் மருத்துவ பயன்கள்!

0
307

அகத்திகீரையின் மருத்துவ பயன்கள்!

இது சீமை அகத்தி, சிற்றகத்தி, சாழை அகத்தி, முனி, கரீரம் , அச்சம் என்று பலவாறு அழைக்கப் படுகிறது.
மரம் போல் உயரமாக வளரக் கூடியது. எனினும் இது செடி வகையைச் சேர்ந்தது. வெற்றிலைக் கொடியை படர வைக்க நட்டு இருப்பார்கள். தை, மாசியில் பூ பூக்கும். பூக்கள் வெண்மை நிறமாய் இருக்கும். சிகப்பு நிறமாகவும் பூக்கும். பூ வேர் ,பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது.குளிர்ச்சி தன்மை உள்ளது.

அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை, ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும்.
அகத்தி மரத்தின் பட்டையை இடித்து தண்ணீரில் கலந்து காய்ச்சி குடிக்க விஷக் காய்ச்சல் போய்விடும்.
வேற்பட்டை , ஊமத்தை வேர் இரண்டையும் அரைத்து பற்றுப் போட மூட்டுவலி – மூட்டு வீக்கம் குணமாகும்
நாட்டு மருந்துகள் சாப்பிடும் பொழுது இதனை சாப்பிடக் கூடாது. மருந்துகளின் வீரியத்தை குறைத்து விடும்.

இதன் இலை சாறு செந்தூரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
இலையை இடித்து சாறு பிழிந்து தேவையான , அளவு நல்லெண்ணெய்யுடன் கலந்து எரித்து சாறு சுண்டும் பொழுது பளிங்கு சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு. விளாமிச் சம்வேர் ஆகியவைகளை இடித்து போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கில் நீர் வடிதல், பித்தத் தலைவலி குணமாகும்.

இதன் இலைச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து , நீர்க்கோர் வை பிடித்துள்ள குழந்தகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
இலைளை உலர்த்தி பொடி செய்து காலை , மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அளவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீரடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.
அகத்திகீரையை தொடர்ந்து 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பித்தம் அகலும். பார்வை தெளிவாகும்.

அகத்தி கீரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. மலச்சிக்கலை போக்கும். காய்ச்சலை தணிக்கும் தன்மை கொண்டது. அகத்தி பூக்கள் வெண்மை நிறம் கொண்டவை. கார்த்திகை முதல் மாசி மாதம் வரை இந்த பூக்கள் கிடைக்கும்.

அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபி, டீ அதிகம் குடிப்பதனால் ஏற்படும் பித்தம் ஆகியவற்றை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். அகத்தி பூக்கள் 3 எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி பருகலாம். இந்த தேனீரை வாரம் ஒருமுறை குடித்துவர பித்தம் குறைந்து வெப்பம் தணியும்.

அகத்தியில் கால்சியம் அதிகளவில் உள்ளது. வைட்டமின் சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்தி, வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், தோல் பிரச்னை, பித்தத்தால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை போக்குகிறது. காய்ச்சலை தணிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது. அகத்தி கீரையை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் ஏற்படும். இதை அளவுக்கு அதிமாக பயன்படுத்த கூடாது.
அகத்தி வேரை பயன்படுத்தி உடல், கை கால் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர உள்ளங்கை, கால் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கண் எரிச்சல் குணமாகும். இதை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

அகத்தியானது உடல் வெப்பத்தை சமப்படுத்தும் உன்னதமான உணவு. வயிற்று கிருமிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. பித்த சமனியாக விளங்குகிறது. அகத்தி கீரையை பயன்படுத்தி இளநரையை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கீரையை பசையாக்கி வைத்துக்கொள்ளவும். கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பங்கு கீரை பசை, 2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். சிறிது கிச்சிலி கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி கலவையை சேர்க்கவும். பின்னர், ஆற வைத்து வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். இதை வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு இருக்காது. இளநரை வராது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: